fbpx
Homeபிற செய்திகள்அங்கக முறையில் கரும்பு சாகுபடி- கோவையில் 82 வயது ஆசிரியர் சாதனை

அங்கக முறையில் கரும்பு சாகுபடி- கோவையில் 82 வயது ஆசிரியர் சாதனை

சாதனை புரிவதற்கு வயது வரம்பு இல்லை என்று நிரூபித்துள்ளார் வரப் பாளயத்தை சார்ந்த ஒய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசாமி. 82 வயதான இவர் ஒய்வு பெற்றபின் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு, அங்கக முறையில் கரும்பு சாகுபடியில் சாதனை படைத்துள்ளார்.

கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், 2002-2007-ம் ஆண்டுகளில், ‘நிறுவன கிராம இணைப்பு திட்டம்’ மூலம் தடாகம் பகுதியிலுள்ள மூன்று கிராமங்களிலிருந்து 350 குடும் பங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களிலுள்ள விவசாயிக ளின் பொருளாதார மேம்பாட் டிற்காக செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

அந்த செயல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ராமசாமி வாத்தியார். தண்ணீர் பற்றாக் குறை மற்றும் வன விலங்குகளின் தொல்லை காரணமாக அந்த ஊர் விவ சாயிகள் நாளடைவில் கரும்பு சாகுபடியை கைவிட்டனர்.

ராமசாமி தன்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் 2017 முதல் அங்கக முறையில் விவசாயம் செய்து வருகிறார். தென்னை, வாழை, சப்போட்டா, காய்கறிகளை விளைய செய்து அங்கக அங்காடிகளுக்கு விநியோகம் செய்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக இவர் மீண்டும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேளாண் விரிவாக்கத் துறையில் முதன் மை நிலை விஞ்ஞானி முனைவர் இரஜூ லா ஷாந்தியிடம் அங்கக முறையில் கரும்பு சாகுபடி செய்யும் ஆர்வத்தை தெரிவித்தார்.

அங்கக முறையில் தயாரித்த வெல்லத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த இவர், ராமசாமி மூலம் கோவை வாழ் மக்களுக்கு அங்கக வெல்லம் கிடைக்க பெறும் வண்ணம் தகுந்த கரும்பு இரகங்களை தர முன் வந்தார்.

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் புதிய கரும்பு இரகங்களை கொண்ட ‘தொழில் நுட்ப பூங்கா’ ஒன்றை விரிவாக்கத் துறை பராமரித்து வருகிறது.

இந்த பூங்காவிலிருந்து கோ 0212 மற்றும் கோ 11015 என்ற புதிய அதிக கரும்பு மகசூல், நல்ல சர்க்கரைச் சத்து கொண்ட இரகங்களை தேர்வு செய்து விதை கர ணைகளை தந்தார். இந்த இரண்டு இரகங்களும் தரமான நல்ல பொன் நிறம் கொண்ட அதிக நாட்கள் சேமித்து வைக் கும் திறன் உள்ள இரகங்கள் ஆகும்.

ராமசாமியின் பண்ணையில் அங்கக இடு பொருட்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகின்றன. இவரது மூன்று காங்கேயம் நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணம், கோமூத் திரம் உரத் தொட்டியில் சேமிக்கப்படுகிறது.

இதனுடன் வேப்பிலை, புளியம் இலை, கறிவேப்பிலை, செம்பருத்தி, கிளி ரிசிடியா, சோற்றுக் கத்தாழை ஆகியவை அடங்கிய மூட்டைகள் இட்டுள்ளார்.
இந்த கலவை சொட்டு நீர் பாசனத்துடன் கரும்பு மற்றும் இதர பயிர்களுக்கு அளிக்கப் படுகிறது.

கடந்த ஆண்டு அங்கக முறை கரும்பில் இவருக்கு 82.65 டன்கள் கரும்பு மகசூலும், சுமார் 10.20 டன்கள் வெல்லமும் கிடைத்தது.

கடந்த 20 நாட்களாக இந்த ஆண்டு அறுவடை துவங்கி, இவரது தோட்டத்தில், அதாவது ‘வாத்தியார் தோட்டத்தில்’ வெல்லமும் தயாரிக்கப்பட்டு வரு கிறது. கோவை மக்களுக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம்.

படிக்க வேண்டும்

spot_img