Home தமிழ்நாடு உலக கல்லீரல் தினம் - விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம்...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும் அதிநவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கருவியை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் டாக்டர். எஸ்.பி. தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இந்த கருவியானது பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி.பிரசாத் கூறியதாவது:-

கல்லீரல் ஒழுங்காக இயங்கவில்லையென்றால் மனிதன் உறங்க முடியாது. குளுக்கோஸ் போன்ற பொருட்களின் உற்பத்தி, கிருமிகளை அழித்தல், உட்கொள்ளும் நச்சுக்களை களைதல் மற்றும் ரத்த விருத்தி போன்று 5000 வேலைகளை செய்யும் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.
இக்கல்லீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்று கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை முதல் கட்டமாக செய்கிறோம்.

அடுத்து, கல்லீரல் கொழுப்பு எவ்வளவு உள்ளது, கல்லீரல் நார்ச்சத்தினால் கெட்டிப்பட்டுள்ளதா என்பதை அறிய “பாட்கேப் பைபிரோஸ்கேன்” செய்கிறோம். இது ஆரம்ப நிலையிலேயே கல்லீரல் நோய்களைக் கண்டறிந்து முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் முதன் முறையாக வி.ஜி.எம். மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் அறிமுகம் செய்யப்பட்டது. அந்நாளைய தமிழக ஆளுநர் மேதகு ரோசய்யா அவர்களின் கரங்களால் துவக்கப்பட்டு 8 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கல்லீரல் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப்” உலகின் ஒரு அதிநவீன கருவியாகும். இந்த கருவி பாரிஸில் உள்ள எக்கோசென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து உலகெங்கும் அனுப்பப்படுகிறது.

இது சென்னையில் அமைந்துள்ள ம்ருதான் மெடிக்கல் டெக்னாலஜி நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விடத் கல்லீரலின் கெட்டித்தன்மையை மிக துல்லியமாக அளக்கக் கூடியது. (200 பதிவுகளை ஒரு நொடியில் கணிக்கிறது).

கல்லீரலில் கொழுப்பு மிகுதியாக இருத்தல் ஆபத்து. அதையும் உடன் கணிக்கிறது. இக்கருவியின் பதிவில் சாதாரணமாக 240 பீஙி/னீ கீழே இருக்க வேண்டும். 280 மேல் இருந்தால் ளு3 கிரேடை குறிக்கிறது (இது 67 சதம் கல்லீரல் செல்களில் கொழுப்பு படிந்துள்ளதை குறிக்கிறது).

இது கல்லீரல் இயக்கத்தை பாதிக்கிறது, செல்களை உடைய செய்கிறது மற்றும் கல்லீரல் கெட்டித்தன்மைக்கு வழிகோலுகிறது.

சில ஆண்டுகளில் சுருங்கிய கல்லீரல் நோய்க்கு ஆளாக்குகிறது (சிரோசிஸ்). இது கண்டிப்பாக தடுக்கப்பட கூடிய ஒரு நோயாகும்.
உடல் பருமன் அதிகம் உள்ளோர்.

சர்க்கரை நோய் உள்ளோர். கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைடு கொழுப்பு, மது அருந்துபவர்கள். நச்சுத்தன்மை கூடிய மருந்துகள் உட்கொள்பவர்கள் கல்லீரல் கெட்டித்தன்மை பெற்று பாதிக்கப்படலாம்.

கல்லீரல் நோய்க்கு தமிழகத்தில் முதன் முறையாக வி.ஜி.எம் மருத்துவமனை 3 ஆண்டுகளுக்கு முன் பிரத்யேக கல்லீரல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் திட்டம் மூலம் உங்கள் கல்லீரல் நலமா என்ற கேள்விக்கு சிறப்பான விடை நீங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...