Home தலையங்கம் தமிழக அரசு மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்!

தமிழக அரசு மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்!

கடந்த வாரம் 2 நாட்களில் தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி மருந்து சப்ளை இல்லை என்பது தான் மனக்குறைவை அளிக்கிறது.

18ம் தேதி நிலவரப்படி 4 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தான் இருந்தது. இன்னும் 2 நாட்களுக்கு தான் தாக்கு பிடிக்கும் என்று தமிழக அரசு அபயக்குரல் எழுப்பிய பிறகு ஒரு லட்சம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பியிருந்தது.

மேலும் 2 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதாக கூறியிருந்தது. கடும் தாகத்தில் இருக்கும் ஒருவருக்கு ஒரேயொரு சொட்டு தண்ணீரை நாக்கில் தடவி தாகத்தை தணித்துக் கொள் என்பது எப்படி இருக்குமோ அது போலத்தான் இந்த மருந்து சப்ளை இருக்கிறது.

எனவே தமிழக அரசு விடுத்த கோரிக்கையான 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கு பிறகும் தொடர்ந்து தேவைக்கேற்ப அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது கொரோனா வராமல் தடுக்கும் கேடயம்.

ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்துக்கும் கடுமையான தட்டுப்பாடு இருப்பது நிச்சயம்.
ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரிக்கும் சில நிறுவனங்கள் இப்போது அதன் விலையை பெருமளவில் குறைத்திருக்கிறது.

ஆனால் இந்தியாவிலுள்ள இந்த 7 நிறுவனங்கள் மாதத்திற்கு 38 லட்சத்து 80 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளைத்தான் உற்பத்தி செய்யும் திறன்படைத்ததாக இருக்கிறது.

உடனடியாக இந்த 7 நிறுவனங்களும் உற்பத்தியை பெருக்க மத்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்தும் தருவிக்க வேண்டும். இதுபோல ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஒரு போதும் ஏற்படக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...