Home பிற செய்திகள் கோவை அருகே பள்ளத்தில் 10 அடி நீள முதலையால் பரபரப்பு

கோவை அருகே பள்ளத்தில் 10 அடி நீள முதலையால் பரபரப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தையடுத்து சின்னமத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளத்தில் நேற்று சுமார் 10 நீளமுள்ள முதலை தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள சின்னம்மத்தம்பாளையம் கோட்டை பிரிவிலிருந்து ஒன்னிபாளையம் செல்லும் வழியில் ஏழெருமைப் பள்ளம் உள்ளது. இங்குள்ள சீனிவாச நாய்க்கர் தோட்டத்தின் அருகில் நேற்று மதியம் மூன்று மணியளவில் மிகப்பெரிய முதலை ஒன்று கரையில் படுத்துக் கிடந்தது.


இதனை அவ்வழியே சென்ற மூர்த்தி என்பவர் பார்த்து பெரியநாயக்கன் பாளையம் வனத்துறைக்கு தகவல் அளித்தார். முதலையைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் சுமார் 20 நிமிடங்கள் கரையில் வெய்யில் காய்ந்து கொண்டிருந்த முதலை பின்னர் தண்ணீருக்குள் சென்றுவிட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பள்ளத்தினருகில் யாரும் செல்லகூடாது. பாது காப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த ஒருமாதத்திற்கு முன்பு இரவு நேரத்தில் இங்குள்ள டாஸ்மாக் கடை அருகே கொட்டப்படும் கோழிகழிவுகளை இம்முதலை சாப்பிட வந்துள்ளது.
கடந்த வாரமும் பலரின் கண்களுக்கு இது தென்பட்டுள்ளது.


தற்போது முதலை தென்பட்ட இடமானது மேய்ச்சல் மாடுகள் தண்ணீர் அருந்த வரும் இடமாகும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும் முன்னர் சுமார் 10 அடிநீளமுள்ள மிகப்பெரிய இந்த முதலையை வனத்துறையினர் பிடித்து ஆற்றில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...