Home தலையங்கம் மறுபடியும் நினைவில் கொள்வோம் நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு

மறுபடியும் நினைவில் கொள்வோம் நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு

கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள், ஆரவாரித்தார் கள். முகக்கவசத்தை மட்டும் மறக்காமல் சட்டை பையில் பத்திரமாக வைத்திருந்தார்கள்.
தேர்தல் முடிந்த பிறகு கொரோனா மற்றும் காய்ச்சலுக்கான பரிசோதனைகளை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது, சுகாதாரத்துறை.
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுக்க மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் மறு சுற்றாக பரவிக் கொண்டிருக்கிறது. மறுபடியும் பாதிக்கப்படுகிறவர்களும், உயிரிழப்பவர்களும் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 8 மாநிலங்களில் 84 சதவிகித அளவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 2800 பேருக்கு மேல் பாதிப்படைகிற அளவுக்கு தீவிரப்பட்டிருக்கிறது நிலைமை.
கொரோனா தடுப்பூசியை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று சற்றே தளர்த்திய பிறகு தடுப்பூசி செலுத்தி கொள்கிறவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.
தடுப்பூசி பற்றிய அச்சங்களையும், தயக்கங்களையும் விலக்கிவிட்டு, அவரவர் தங்கள் பாதுகாப்பை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய நேரமிது. அதோடு முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடுமையாக கடைபிடித்தாக வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
மறுபடியும் நினைவில் கொள்வோம், நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...