கோவை கவுண் டம்பாளையம் அருகே காசிநஞ்சே கவுண் டன்புதூரில் வீசிய சூறாவளிக் காற்றில் ஒரு தோட்டத்தில் பயிரிடப் பட்டிருந்த ஆயிரக் கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
கோவை தடாகம் சாலை அருகே உள்ள இக்கிராமத்தில் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியின் எதிரில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டு அறுவ டைக்கு தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதில் வாழைகள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தன. மேலும் இப்பகுதியில் மற்ற தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், சோளப் பயிர்களும் நாசமடைந் தன.