Home தமிழ்நாடு தமிழகத்தில் கொரோனா தடுக்க ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்:கோவில் விழா- மத கூட்டங்களுக்கு தடை

தமிழகத்தில் கொரோனா தடுக்க ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்:கோவில் விழா- மத கூட்டங்களுக்கு தடை


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப் பாடு களை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி கோவில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியி டப்பட்டிருக்கும் அறிக் கையில் கூறி இருப்பதாவது:

மத்திய உள்‌ துறை அமைச்சகத்தால்‌ அனும திக்கப்பட்ட வழித் தடங்களைத்‌ தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால்‌ நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌, இதற்கான தடை தொட ரும்‌.

தமிழ்நாடு முழுவதும்‌ நோய்க்‌ கட்டுப்பாட்டு பகு திகளில்‌ தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்‌. நோய்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டு திருவிழாக்கள்‌ மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்களுக்கு 10ம் தேதி முதல்‌ தடை விதிக்கப்படுகிறது.

10ம் தேதி முதல்‌ கோயம்பேடு வணிக வளாகத்தில்‌ செயல்படும்‌ சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள்‌ மட்டும்‌ செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டங்களில்‌ உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில்‌ சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பா டுக ளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன்‌ அனுமதி அளிக்கப்படுகிறது. இந்ந டைமுறைகள்‌ 10ம் தேதி முதல்‌ அமலுக்கு வரும்‌.

நோய்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும்‌ ஒத் துழைப்பு நல்க வேண்டும்‌.

தொழிற்சாலைகள்‌, வணிக வளாகங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, அலுவலகங்கள்‌ மற்றும்‌ உணவு விடுதிகளில்‌ பணிபு ரியும்‌ பணியாளர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ பொது மக்களின்‌ உடல்‌ வெப்ப பரிசோதனை செய்யப்படுவதையும்‌, கை சுத்திகரிப்பான்‌ உபயோகப்படுத்துவதையும்‌, முகக்‌ கவசம்‌ அணிவதையும்‌ சம் மந்தப்பட்ட நிறுவனங்கள்‌ உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும்‌. முகக்‌ கவசங்கள்‌ அணியாமல்‌ இருப்பவர்களை கட்டா யமாக அனுமதிக்கக்‌ கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலை யான வழிகாட்டு நடை முறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள்‌ இயங்க அனுமதிக்கப்படும்‌. தொழிற் சாலைகளில்‌ பணிபுரியும்‌ பணி யாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப் போது வழங்கும்‌ அறிவு ரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழி ற்சாலை நிர்வாகம்‌ செய்ய வேண்டும்‌.

மேலும்‌, நிலை யான வழிகாட்டு நடை முறைகளை முறையாக பின்பற்றாத தொழிற் சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து மற்றும்‌ பெருநகர சென்னையில்‌ இயக்கப்படும்‌ மாநகரப்‌ பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக் கப்படும்‌.

பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்ய அனுமதி இல்லை. தற்போது கொரோனா நோய்த்‌ தொற்று அதிகரித்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும்‌ கர்நாடகம்‌ செல்லும்‌ பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌. பேருந்துகளில்‌ நின்று கொண்டு பயணம்‌ செய்ய அனுமதி இல்லை.

முகக்‌கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டா யம்‌ பின்பற்றி, காய்கறி கடைகள்‌, பல சரக்கு கடைகள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌, வணிக வளாகங்கள்‌, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ ஒரு நேரத்தில்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌ மட்டும்‌ இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின் பற்றி, உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக் கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌.

உணவகங்களில்‌ இரவு 11.00 மணி வரை பார்சல்‌ சேவை அனுமதிக்கப்படும்‌.
கேளிக்கை விடுதிகளில்‌ 50 விழுக்காடு வாடிக் கைய £ளர்களுடன்‌ செயல்பட அனுமதி க்கப்படும்‌.

பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள்‌, உயிரியியல்‌ பூங்காக்கள்‌, அரு ங்காட்சியகங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ இடங்கள்‌ 50 விழுக்காடு வாடிக் கையாளர்களுடன்‌ செயல் பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நடை முறைகளைப்‌ பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள்‌ உள்ள திரையரங்கு வளாகங்கள்‌, வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள்‌ உட்பட அனைத்து திரைய ரங்குகளும்‌ 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும்‌ பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, உள்‌ அரங்கங்களில்‌ மட்டும்‌ அதிகபட்சமாக 200 நபர்கள்‌ மட்டும்‌ பங்கேற்கும்‌ வண்ணம்‌, சமுதாயம்‌, அரசியல்‌, கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்‌ மற்றும்‌ விழாக்கள் அனுமதி யளிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, திருமண நிகழ்வுகளில்‌ 100 நபர்களுக்கு மிகாமலும்‌, இறுதி ஊர்வலங்களில்‌ 50 நபர்களுக்கு மிகாமலும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்‌.

விளையாட்டு அரங்கங்கள்‌ மற்றும்‌ விளை யாட்டு மைதா னங்களில்‌, பார்வையாளர்கள்‌ அனு மதியின்றி விளை யாட்டு போட்டிகள்‌ நடைபெற அனுமதிக்கப்படும்‌.

நீச்சல்‌ குளங்கள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும்‌ செயல்பட அனுமதிக்க ப்படும்‌.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள்‌ வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அரசால்‌ வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ பொது மக்கள்‌ வழிபாடு இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

இருப்பினும்‌, அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ திருவிழாக்கள்‌ மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌ நடத்த அனுமதி இல்லை.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும்‌ திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. இருப்பினும்‌, படப்பி டிப்பில்‌ கலந்து கொள்ளும்‌ சின்னத்திரை / திரைபடக்‌ கலைஞர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ கொரோனா பரிசோதனை செய்து கொண்டு/ தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில்‌ கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும்‌ திரைப்படப்‌ படப் பிடிப்பு நிர்வாகங்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களில்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து மூன்று பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க ஏற்கனவே 17.2020 முதல்‌ அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, இந்தக்‌ கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்‌.

ஆட்டோக்களில்‌ ஒட்டுநர்‌ தவிர்த்து இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க ஏற்கனவே 11.7.2020 முதல்‌ அனும திக்கப்பட்டுள்ள நிலையில்‌, இந்தக்‌ கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்ப டுத்தப்படும்‌.

வெளி மாநில ங்கள்‌ மற்றும்‌ வெளி நாடுக ளிலிருந்து தமிழ்நா ட்டிற்கு வரும்‌ நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.

அரசு மருத்துவ நிலையங்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தனி யார்‌ மருத்துவமனைகளில்‌ கொரோனா தடுப்பூசி மையங்கள்‌ தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலைத்‌ தடுக்கும்‌ விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்‌, அரசு மருத்துவ நிலையங்கள்‌ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ மருத்துவ மனைகளில்‌ இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

நோய்த்‌ தொற்று அறிகுறி இருந்தால்‌ தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்‌.

இதனை கடைபிடித்து, கோவிட்‌ நோய்த்‌ தொற்று பரவாமல்‌ இருக்க அரசு எடுக்கும்‌ நடவடிக்கைகளுக்கு பொது மக்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்று பொதுமக்களை அரசு கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...