கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள ஓசூர் – கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முக்கியஸ்தர்கள் வந்து செல்வார்கள் என்று கட்டுமான குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து, பூமி பூஜைக்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்த இடத்தில் எல்லைச்சுவருக்கு அருகே மின்சார கம்பிகள் சென் றுள் ளது.
இந்த மின்சார கம்பிகள் பந்தல் அமைக்கும் கம்பிக ளுடன் எதிர்பாராத விதமாக உரசிக்கொள்ளவே, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ஆகாஷ் (வயது 30), மகாதேவ் (வயது 35), விஜயந்தா (வயது 35), விஜய் (வயது 40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், உடன் அருகில் இருந்த 6 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இது குறித்து உடனடியாக அவசர ஊர்தி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் உடனடியாக அப் பகுதியில் துண்டிக் கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு அங்குள்ள மருத் துவமனையில் சிகிச் சைக்காக அனுமதி செய் யவே, உயிரி ழந்தவர் களின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக அத்திப்பள்ளி காவல் துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.