Home தலையங்கம் அரியவகை நோய்களிலிருந்து நோயாளிகளை காத்திட வேண்டும்

அரியவகை நோய்களிலிருந்து நோயாளிகளை காத்திட வேண்டும்

அரியவகை நோய்கள் என்பவை குறிப்பிட்ட மக்கள் தொகையில் குறைந்த அளவில் ஏற்படுபவை என்று வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த நோய்களை கொண்டிருக்கும் ஒட்டு மொத்த நபர்களின் எண்ணிக்கை, அவை எப்படி பரவலாக காணப்படுகின்றன? அவற்றுக்கு சிகிச்சை கிடைக்கிறதா, கிடைக்கவில்லையா? என்ற அளவீடுகளும் அரியவகை நோய்கள் எவை என்பதை தீர்மானிக்க பயன்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி அரியவகை நோய் என்பது 10 ஆயிரம் பேரில் 6&5&10 பேருக்கு இருப்பது. ஒரு கணிப்பின்படி 7 ஆயிரம் அரியவகை நோய்களும் அவற்றை கொண்டிருக்கும் 30 கோடி பேரும் உலக அளவில் இருப்பதாக தெரிகிறது. அரிய வகை நோய்களுக்கான இந்திய அமைப்பின் படி வம்சாவளி மூலம் புற்றுநோய்கள், தன் தடுப்பாற்றல் சீர்குலைவுகள், பிறவிக்குறை வளர்ச்சிகள், ஹிர்ஸ்ரேஸ் நோய், கௌச்சர் நோய், குடம நாரிழை நோய், தலைச்சிதைவு நோய்கள், லைசோனேம் தேக்க நோய்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தற்போதைய கொள்கையின் அறிவிக்கையானது நீண்ட போராட்டத்துக்கு ஒரு நல்ல முடிவாக வந்திருக்கிறது, எனினும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் பலவற்றுக்கும் நிதி ரூ.80 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு இந்த செலவை பகிர்ந்து கொள்வது குறித்து கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை பிற மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும். மாநிலங்களின் பங்கு எப்படி இருப்பினும் ஒன்றிய அரசை பொறுத்தவரை இந்த தொகை ஒரு பெரிய விஷயமே இல்லை. போதுமான அளவு நிதி ஒதுக்கி அரியவகை நோய்களிலிருந்து நோயாளிகளை காத்திட வேண்டியது மிக மிக அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...