Home தமிழ்நாடு கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல் திடீர் ஆய்வு

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல் திடீர் ஆய்வு

கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது.
நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார்.

கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் தேர்தல் அதிகாரி சுப்பிரமணியத்தை நேரில் பார்த்து பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவித்தார்.


அதன்பின் அவர் இரவில் கோவையிலேயே தங்கியிருந்து வாக்குப்பதிவு விவரங்களை உன்னிப்பாக கவனித்தார். இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு காரில் சென்றார்.

மைதானம் வரை காரில் வந்த கமல்ஹாசன் அங்கிருந்து தனது கட்சிக்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்து வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை சென்றார்


பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கமல்ஹாசன் சென்றார். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து மற்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்த கமல்ஹாசன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...