கோவையை சேர்ந்த சிஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் தருண்குமார் மற்றும் அவரது மாணவர் அபினவ் ஆகியோர் செட்டிபாளையைம் கரி மோட்டார் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை அதிவேகமாக கடந்து இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
கோவையை சேர்ந்தவர் எஸ்.தருண்குமார். கிருஷ்ணா கல்லூரியில் பயின்று வரும் இவர், படித்து கொண்டே சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இதன் வாயிலாக ரேசில் ஆர்வமுடையை மாணவ, மாணவிகளுக்கு அதி வேக ரேசில் கலந்து கொள்வதற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் ரேசிங் குறித்த பயிற்சி அளித்து வரும் இவர், கோவையில் உள்ள தேசிய அளவில் பிரபலமான கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை தனது கவாசகி நிஞ்சா 300 சி.சி. அதிவேக பைக்கில் ஒரு நிமிடம் 23 நொடிகளில் (1.23.81) கடந்து சாதனை புரிந்துள்ளார்.
இதே போல இவரிடம் பயிற்சி பெற்று வரும் எஸ்.என்.எஸ். கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் அபினவ்.ஜி என்ற மாணவரும் தனது யமஹா ஆர் 15 வி3 அதி வேக பைக்கில் ஒரு நிமிடம் 26 (1.26.19) நொடிகளில் ஒரு சுற்றை கடந்து சாதனை புரிந்துள்ளார்.
இவர்கள் இருவரது இந்த சாதனை இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத் தில் இடம் பெற்றது.
சாதனை நிகழ்வை டி.வி.எஸ்.யூரோ கிரிப்,எஸ். என்.எஸ்.இன்ஸ்ட்டிடி யூசன்ஸ்,யுனைடெட் கூலிங் சிஸ்டம்ஸ், அலாஃப்ட் ஒட்டல்ஸ், ஸ்பார்க்ஸ் ரேசிங் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.