Home தலையங்கம் வட்டி குறைப்புகள் இருக்க கூடாது

வட்டி குறைப்புகள் இருக்க கூடாது

சிறு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி குறைப்பு என்ற நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் திடீர் அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக பாதித்துவிட்டது. ஆனால் இந்த அறிவிப்பை நிர்மலா சீத்தாராமன் 12 மணி நேரத்தில் சரி செய்தது பாராட்டத்தக்கது.


ஒரு ஆண்டு டெபாசிட்டுக்குத்தான் 5.5 சதவீத வட்டிக்கு பதிலாக இனி 4.4 சதவீதம் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்வு அலையை இது ஏற்படுத்தியது. ஆனால் நல்ல வேளையாக 12 மணி நேரத்தில் நிர்மலா சீத்தாராமன் இது கவனத்தை மீறி நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு. உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டியே அடுத்த 3 மாதங்களுக்கும் தொடரும் என அறிவித்தார். ஆணையத்தின் அனுமதியை பெற்றே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


முதலில் வெளிவந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை அளித்தது. நிர்மலா சீத்தாராமனின் அறிவிப்பு அதற்கு நிவாரணமாக அமைந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலில் முதல் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் திரும்ப பெறப்பட்டது என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வந்தாலும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை போக்க அளிக்கப்பட்ட இந்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

ஆனால் இது எப்போதும் தொடர வேண்டும். பெரும்பாலான மக்கள் வேறு வருவாய் இல்லாமல் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் தாங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த சிறுசேமிப்புகளில் கிடைக்கும் வட்டியை வைத்தே வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார்கள். குறிப்பாக முதியோர் இந்த வட்டி தொகையை வைத்தே மாதாந்திர பட்ஜெட் போட்டு நாட்களை கழிக்கிறார்கள்.


ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மற்றொரு பக்கம் மருத்துவ செலவு அதிகரிப்பு என்ற சூழ்நிலையில் கூடுமான வரையில் சிறு சேமிப்புக்கு வழங்கப்படும் வட்டியில் கைவைக்காமல் இருப்பது நல்லது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கி துணை கவர்னராக இருந்த சியாமளா கோபிநாத் குழு அளித்த அறிக்கையை பின்பற்றி சிறு சேமிப்பு திட்டங்களை சீரமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நிலவுகிறது.


ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அந்த நாட்டிலுள்ள உள்நாட்டு சேமிப்புகள் முக்கியமான அம்சமாக இருக்கும். எனவே சேமிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கு வழங்கப்படும் வட்டித் தொகை இருக்க வேண்டுமே தவிர நீ எங்களுக்கு வேண்டாம் வெளியே தனியார் சேமிப்புகளுக்கு போ என்று தள்ளிவிடும் வகையில் வட்டி குறைப்புகள் இருக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...