கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக “பெண்களின் சாதனைகள் மற்றும் சவால்கள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அகிலா தலைமை தாங்கி மகளிர் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அவரது உரையில் பெண் சாதனையாளர்களின் வெற்றியையும் அவர்கள் சந்தித்த சவால்களையும் பற்றி எடுத்துரைத்தார்.
எந்த ஒரு சமூக பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதற்கும் சமூகத்திற்கு ஒரு பங்களிப்பை வழங்கு வதற்கும் இளம் மாண வர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு, மற்றும் சிப்பிங் சிந்தனைகள் நிறுவனமும் இணைந்து ஆன்லைனில் ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது.
இந்நிகழ்ச்சி கல்லூரியின் பெண்கள் மேம் பாட்டு அமைப்பின் சார்பில் முனை வர் ஜி.அனுஷா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.