Home தமிழ்நாடு சமஸ்கிருத மொழியில் செய்தி: கோவையில் பொதிகை டிவி நிலைய அலுவலகம் முற்றுகை 30 பேர் கைது

சமஸ்கிருத மொழியில் செய்தி: கோவையில் பொதிகை டிவி நிலைய அலுவலகம் முற்றுகை 30 பேர் கைது

சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து கோவை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாள்தோறும் சமஸ் கிருதச் செய்தித் தொகுப்பை தமிழ்நாட்டில் பொதிகை தொலைக்காட்சியிலும், பிறமாநிலத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டல தொலைக்காட்சி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், மத்திய அரசின் சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள பொதிகை தொலைக்காட்சி நிலை யத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து த.பெ.தி.க பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: வழக்கொழிந்த வடமொழியான சமஸ்கிருத மொழியில் பொதிகை தொலைக்காட்சியில் செய்தியாக வாசிக்க உத்தர விட்டு, கடந்த 1ம் தேதி முதல் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கப்படுகிறது.
அது ஒரு செத்துப் போன மொழி. இந்தியா முழுவதும் 15 ஆயிரம் பேர் கூட பேசாத மொழிக்காக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது பா.ஜ.க.
சமஸ்கிருத திணிப்பின் மூலம் இந்தியா ஆரிய பண்பாடு நிறைந்த நாடு என்பதை காட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது.
ஏற்கனவே மாநில மொழிகள் அழியும் நிலை யில் உள்ள சூழலில், அதற்கு ரூ.10 கோடி மட் டும் நிதி ஒதுக்கிவிட்டு, சமஸ்கிருதத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கி செலவு செய் வது மக்கள் பணத்தை வீணடிக்கின்ற செயல்.
மாநில மொழி உரிமை களை பறிக்கும் செயல். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பொதிகை தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட முயன்ற 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: ஜனவரி 18ம் தேதி தொடங்குகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 18ல் தொடங்கி 30ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய...

கோவை: விவேகானந்தர் 158வது பிறந்த தின விழா

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை காளப்பட்டி மண்டல் பாஜக இளைஞ ரணி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த...

காரமடையில் திமுக நடத்திய பொங்கல் விழா

திமுக சார்பில் கார மடை காந்தி நகர் டிஆர்எஸ் அத்வைத அவென்யூ வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச் சந்திரன் தலைமையில் டிஎஸ்ஆர் பிராப்பர்ட்டி உரிமையாளரும் திமுக...

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பொங்கல் விழாவை பொங்கல் வைத்தும் மாணவிகளுக்கு கோலப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் கோவை மாவட்ட மொத்த...

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்-கற்பியுங்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கி பல்வேறு முடக்கங்கள் அறிவிக்கப்பட்டதில் கல்விக்கூடங்கள் முடங்கின. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் வாழ்வில் இதுவரை கடக்காத சிக்கல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்கொள்ள வேண்டிய...