கோவையை அடுத்த பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம் கணபதிபுதூர் என்ற இடத்தில் பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று புள்ளிமான்குட்டி ஒன்று புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அந்த புள்ளி மானை கடித்து கொன்று அதன் கறியை தின்று சென்றுகொண் டிருந்தது.
இதை அந்த வழியாக வந்த 3 பேர் பார்த்து நாயை துரத்தி விட்டு மான் கறியை கூறு போட்டு பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வனக்காப்பாளர் மதுசூதனன், வன காவலர்கள் அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறியை வெட்டி கூறுபோட்ட தோளம்பாளையம் கணபதி புதூர் குருந்தாசலம் வயது 36 மன்னார்காடு தாசனூரைச்சேர்ந்த முருகன் (35), தோளம்பாளையம் கோபால் ( 32) ஆகியோரை கைது செய்தனர்.
மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.