தமிழகத்தில் தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை டிசம்பர் 7ம் தேதி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் விழாவும், ஜனவரி 13,14,15ல் பொங்கல் பண்டிகை வருவதாலும் கல்வி நிறுவனங்களை ஜனவரி 15க்குப் பிறகு திறக்கலாம் என பெற்றோர், ஆசிரியர் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா இன்னும் முழு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக தமிழகத்திலும் நோய்த்தொற்று படிப்படியாகத்தான் குறைகிறது. இதனால் தான் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது நல்லதல்ல என பெற்றோர்களும், பேராசிரியர்களும் கருதுகின்றனர். தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும் நிலையில் கல்லூரிகளை மட்டும் திறக்கலாமா? என கேட்கின்றனர்.
டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் வருகிறது. பொதுவாக டிசம்பர் மாதம் முழுவதும் இந்த கொண்டாட்டம் நடைபெறும். அதேபோல் ஜனவரி மாதம் 13,14,15 ஆகிய 3 தினங்களும் தமிழர்களின் திருநாளான பொங்கல் கொண்டாடப்படும். எனவே இந்த பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு கல்லூரிகளை திறக்கலாமே என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருதுகின்றனர்.
எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறக்க உத்தரவிடலாம். இந்த 1½ மாதங்களில் நோயின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து யோசித்து முடிவெடுக்கலாமே?