கோவையில் தேவேந்திர குல மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தங்களின் 7 உட்பிரிவுகளையும் உள்ள டக்கி, “தேவேந்திர குல வேளாளர்” என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தேவேந்திர குல வேளாளர் மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இதில் கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேவேந்திர குல மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும் பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான் ஆகிய சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும், பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சதீசு மள்ளர், மணிவண் ணன்,,பாபு ,தீபம் முனி யப்பன், நக்கீரன்,தீனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.