Home தலையங்கம் கருப்பு பணம் எப்போது வெளிச்சத்துக்கு வரும்?

கருப்பு பணம் எப்போது வெளிச்சத்துக்கு வரும்?

உலகம் முழுவதும் கருப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்க பூமியாக திகழ்வது சுவிட்சர்லாந்து. அங்குள்ள சுவிஸ் வங்கிதான் உலகம் முழுவதும் இருந்து சுரண்டி கொட்டப்படும் பணத்தை பூதம் காப்பதுபோல காத்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து ரகசியம் வெளியே வராது. ஆனால் மீட்டு வருவேன் என்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. மோடியின் தீவிர முயற்சியின் பலனாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கருப்பு பணம் வைத்திருப்போரின் ஒரு பட்டியலை சுவிஸ் நாடு மத்திய அரசிடம் ஒப்படைத்தது.
ஒரு ஆண்டுக்கு பிறகு இப்போது 2வது பட்டியலை கொடுத்துள்ளது. முதல் பட்டியலில் 75 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. இப்போது கொடுத்துள்ள 2வது பட்டியலில் 86 நாடுகளை சேர்ந்த 31 லட்சம் கணக்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்தியர்களின் பொய் கணக்கு எண், முகவரி எந்த மாநிலத்தில் வசிக்கிறார், பணபரிமாற்றம் நடந்த விபரங்கள், கணக்கில் இருப்பு பணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. முதல் பட்டியல் அரசின் கைக்கு கிடைத்து ஓராண்டாகிவிட்டது. அதன் மீதான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. முதல் பட்டியலுக்கும் 2வது பட்டியலுக்கும் இடையேயான இடைவெளி ஒரு ஆண்டு. இந்த கால கட்டத்துக்குள் எவ்வளவோ தில்லாலங்கடி வேலைகள் நடந்து இருக்கும்.
நம் நாட்டு அரசின் கண்ணில் மண்ணை தூவி சுவிட்சர்லாந்தில் கொண்டு சேர்த்தவர்களுக்கு அதில் இருந்து தப்பிக்கவும், பாதுகாக்கவும் தெரியாதா என்ன? அதுவும் இருவரும் செய்வது திருட்டுத்தனம். அதாவது இங்கிருந்து ஏமாற்றி கொண்டு செல்கிறார்கள். அதை வங்கி பாதுகாக்கிறது. அந்த நாட்டு வங்கி சாமானியர்களின் பாணியில் சொல்வதென்றால் திருட்டுக்கு உடந்தை. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி தனது நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ அப்படியெல்லாம் உதவியும் இருக்கும்.
எனவே பணம் எந்த அளவுக்கு வெளிவருகிறதோ இல்லையோ இங்கிருந்து யார்? யார்? எவ்வளவு பணத்தை அங்கு கொண்டு போய் பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற விபரம் வெளிவரும். கிட்டதட்ட இந்த இருபட்டியல்களிலும் அப்படித்தான் விபரம் தெரியவந்துள்ளது. அந்த விபரமாவது நாட்டு மக்களுக்கு தெரியவேண்டும். ஏனெனில் பணம் அனைத்தும் நாட்டு மக்களுக்கு சொந்தமானது.
மீட்பு என்பது தலையை விட்டு விட்டு வாலை பிடிக்கும் கதை தான். ஏனெனில் உள்நாட்டிலேயோ எவ்வளவோ மீட்பு நடவடிக்கைகளை மக்கள் நேரிலேயே பார்க்கத்தான் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் கோடி கோடியாக குவிக்கிறார்கள். பின்னர் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இதனால் விளையும் நன்மை என்ன? சேர்த்த பணத்தில் ஒரு சிறு தொகையை செலவிட்டு மீதியை தக்க வைத்து கொள்கிறார்கள். இந்த தைரியமும் நம்பிக்கையும் தான் பலரை முறைகேடாக சொத்து சேர்க்க ஊக்கம் அளிக்கிறது. இந்த நடைமுறை குறைகளுக்கு தீர்வு காண்பது எப்போது?
அதேபோலத்தான் இந்த கருப்பு பண மீட்பு விவகாரமும் பல நடைமுறை சிக்கல்களை சந்திக்கும். அதையெல்லாம் தாண்டி கருப்பு பணம் பதுக்கியவர்கள் விபரங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பதே மக்களின் பெரிய எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...