Home தமிழ்நாடு குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா

குமரகுரு கல்லூரியின் நிறுவனர் அருட்ச்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் நினைவு நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 9 வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் பொருளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 9 ம் நாள் (நேற்று) குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் விருது வழங்கும் விழா நடந்தது.
இவ்விழா 2013ம் ஆண்டு முதல் மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இதுவரை 400 சாதனையாளர்கள் அங்கீகரிக்கபட்டுள்ளனர்.
2016 & 2020 தொகுப்பு மாணவர்களில் கல்வி, விளையாட்டு, கலை, சமூகம், சேவை மற்றும் ஆராய்ச்சி போன்ற செயல்பாடுகளில் ஆக்கத்தினை நிறுவியுள்ள மாணவர்களுக்கும் ஆளுமைகளுக்கும் மெய்நிகர் பயன் அடிப்படையில் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தநிகழ்விற்குக் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமையேற்று பேசினார். அவர் பேசுகையில், `குமரகுரு கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கல்வித்தகுதி மட்டுமல்லாது அவர்களின் தன்னார்வத் தொண்டு, அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் அனைத்தையும் பாராட்டி அங்கீகரிக்கிறது. சாதனையாளர்கள் கோடிக்கணக்கான மக்களின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும். அவர்களின் சாதனைகள் நம் கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வானது கல்லூரியின் வலைஒளியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...