Home தமிழ்நாடு கால் டாக்சி, ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி மூட்டைகள் - பாஜக வழங்கியது

கால் டாக்சி, ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி மூட்டைகள் – பாஜக வழங்கியது

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசிக்கும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மூட்டை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வகுமார் ஆகியோரின் அறிவுரைப்படி பிறந்ததின நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை 58 வது வார்டு ஒண்டிப்புதூர் மண்டலம் நீலிகோணம்பாளையம் பகுதியில் 70 ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு அரிசி மூட்டைகளை மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரீமியர் பிரபாகரன் வழங்கினார். தொடர்ந்து அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு மைலோ ஆரோக்கிய சத்து மாவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், முத்துக்குமார், ரவிச் சந்திரன், வேணு கோபால், செல்லையா, ஆட்டோ பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...