இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் நியு பெர்க் டயக்னாக்ஸ்டிக்ஸ் நிறுவனம், மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட் டரியுடன் இணைந்து ‘ நியுபெர்க் போஸ் லேபரட் டரி ‘ என்ற புதிய நிறு வனமாக இணைந்து செயல்பட முடிவு செய் துள்ளது.
இதற்கான கூட்டு ஒப்பந்தம் மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு (நிறுவனர் மற்றும் தலை வர் நியுபெர்க்), டாக்டர் புரட்சிமணி மற்றும் டாக் டர் பி.அறிவரசன் (போஸ் கிளினிக்கல் லேபரட்டரி) ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
ஏ.கணேசன் (துணைத் தலைவர்), டாக்டர் சரண்யா நாரா யண் (தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் மைக் ரோபயாலஜிஸ்ட்), நியு பெர்க் குழுமம் தலைமை செயல் அதிகாரி ஐஸ் வர்யா வாசுதேவன் ஆகி யோர் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தம் மூலம், மதுரை மற்றும் அதன் சுற்று பகுதிகள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆய்வகங்கள் மற்றும் 100 மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.