Home தலையங்கம் ஆன்லைன் சூதாட்டம் அலட்சியம் வேண்டாம்!

ஆன்லைன் சூதாட்டம் அலட்சியம் வேண்டாம்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் கவலை தருகிறது. இரு தினங்களுக்கு முன் கூட, தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் வெங்கடேஷ், பல லட்சங்களை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரையும் சேர்த்து தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களின் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காசு வைத்து சீட்டாடுவது சட்டப்படி குற்றம். அதே போலத் தானே ஆன்லைன் சூதாட்டமும். சீட்டாட்டத்தில் சில ஆயிரம் ரூபாய்களைத் தான் தோற்பார்கள். சீட்டாடி தோற்று பணமிழந்தவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்கிறார்களா? இல்லையே.

ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சம், லட்சமாக பணத்தை தோற்பதன் மூலம் எத்தனையோ குடும்பங்கள் சீர்குலைந்து கிடக்கின்றன. அதனால் அடிக்கடி தற்கொலைகளும் நிகழ்கின்றன.

சமூகத்தின் பெருங்கேடாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்து வருகிறது. தற்போது மாதம் 2 பேர் தற்கொலை செய்யும் போக்கு, நாள்தோறும் நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

ஏற்கனவே சில மாதங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த ஆன்லைன் சூதாட்டம் தற்போது தங்குதடையின்றி நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்தில், மறுமுனையில் ஆடுவது மனிதன் அல்ல, கணினி என்றும் ஆரம்பத்தில் வெற்றி கிடைப்பது போல சில ஆயிரங்கள் கிடைக்கும்.

ஆனால் அதற்கு அடிமையாகி ஆட, ஆட பெருந்தொகையை அபகரித்து விடுவார்கள் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்து இருந்தது நினைவிருக்கலாம்.

எது எப்படியோ இந்நிலை நீடித்தால், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தடுத்தே ஆக வேண்டும். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இரையான உயிர்கள் போதும். இனியும் உயிர்கள் பலியாக அனுமதிக்கக் கூடாது.

எனவே, தமிழக அரசு தாமதமின்றி தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பித்து அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

ஆபத்தான் ஆன்லைன் சூதாட்டத்தை ஆழக் குழி தோண்டி புதைப்பதில் தாமதம் கூடாது. அலட்சியம் வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005

சிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...

முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்

இந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...

முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...