Home தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம்: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு மேயர் இந்திராணிபொன்வசந்த் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம்: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு மேயர் இந்திராணிபொன்வசந்த் வாழ்த்து

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ஜெ.ஜெர் லின் அனிகா, மேயர் வ.இந்திராணி பொன் வசந்த், ஆணை யாளர் மருத்துவர். கா.ப.கார்த்தி கேயன், ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செவித்திறன் மாற்றுத் திறனாளியான ஜெ.ஜெர்லின் அனிகா, பிரேசிலில் நடைபெற்ற 24வது பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டி ஒற்றையர் பிரிவில் 1 தங்கப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்க பதக்கமும் பெற்றுள் ளார்.

மேலும், இந்திய அணி பேட்மின்டன் குழு போட்டியிலும் வென்று 1 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. தங்கப் பதக்கம் பெற்ற அம்மாணவிக்கு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணை யாளர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் ஆகியோர் மாநகராட்சியின் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பாக வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர் கள்.

ஜெ.ஜெர்லின் அனிகா, கடந்த 2018ல் மலேசியாவில் நடந்த ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பின்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கமும், 2019 ஆம் ஆண்டு சீனா தைபேயில் சிறப்பு பிரிவினருக்கான 2வது உலக இறகுபந்தாட்டம் (பேட்மின்டன்) சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005

சிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...

முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்

இந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...

முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...