Home பிற செய்திகள் வேளாண், உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர்...

வேளாண், உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் மூலம் விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது
தமிழக அரசு விவசா யிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசன திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானி யத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிக்கு ரூ.3,65,295 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள சூரிய ஒளி சக்தி மூலம் இயங் கும் மின் மோட்டார் அமைக்கப்பட்டு, விவசாய பயன்பாட்டினையும், ஆலம்பாளையம் கிராமத் தில் பிரதான் மந்திரி திட்டத்தின் மூலம் ரூ.87,595 மதிப்பீட்டில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட் டுள்ள நுண்ணீர் பாசன திட்டத்தையும் பார்வையிட்டேன்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் விவசாய நிலத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ 4.13 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை வெங்காயம் சேமிப்பு பட்டறையையும் ஆய்வு செய்தேன்.

மொத்தம் ரூ.8,54,272 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் வே ளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் வேளாண் பொருட்கள் விற்பனை செய்ய தேவை யான அடிப்படை வச திகள் குறித்து ஆய்வு செய்து புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான கல்லாபுரம் பகுதி நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் சிங்க் சல்பேட் மற்றும் வேளாண்மை பொ றியியல் துறையின் மூலம் பண்ணைக் கருவிகள் (கடப்பாறை (1) கதிர்அருவாள் (2) மண் வெட்டி (1), களைக்கொத்து (1), இரும்புச்சட்டி (1)) அடங்கிய தொகுப்பினை ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் தேவி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005

சிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...

முன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்

இந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...

முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...