Home தமிழ்நாடு டிஜே நினைவு புகைப்பட போட்டி ஆன்லைனில் பரிசளிப்பு விழா

டிஜே நினைவு புகைப்பட போட்டி ஆன்லைனில் பரிசளிப்பு விழா

லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறகமயானவர்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஜே நிகைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
புகைப்பட போட்டியின் முதலாவது பதிப்பு 2012 ல் நடந்தது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது 9வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த முறை ஆன்லைன் முறையில் நடந்தது. டிஜே நினைவு புகைப்படப் போட்டிக்கு இந்த ஆண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
போட்டிக்கான விதிமுகறைள் வகுக்கப்பட்டு இந்த ஆண்டு 2020 மே 25 முதல் ஜூலை 5 வரை பதிவுகள் www.djmpc.in வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. இந்தூரை சேர்ந்த சுதிர் சக்சேனா, கொல்கத்தாவை சேர்ந்த சுதிப் ராய் சவுத்ரி, திருவனந்தபுரத்தைசேர்ந்த பாலன் மாதவன் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு புகைப்படங்களை தேர்வு செய்தனர். இப்போட்டிகளில் நிர்வாகியாக கே.மருதாசலம் செயல்பட்டார்.
இந்த அண்டு நடந்த டி.ஜே. எம்பிசி 2020 புகைப்பட போட்டியில் 9393 படங்கள், 2223 பங்கேற்பாளர்களிடம் இருந்து வந்தன. இந்த ஆண்டு வனவிலங்குகள். சூரிய உதயம். சூரிய அஸ்தமனம் என வகைப்படுத்தப்பட்ட படங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்த 10 இடங்களை பெற்ற பங்கேற்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு பரிசளிப்பு விழா ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதன் பரிசளிப்பு, விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (ஜூலை 30ம் தேதி) ஆன்லைனில் நடைபெற்றது. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, பரிசு வென்றவர்களை வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...