Home தமிழ்நாடு உலகளாவிய கூட்டு செயல் திட்டம்: மஹிந்திரா - ஹிந்துஜா குழும சைக்யூர் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

உலகளாவிய கூட்டு செயல் திட்டம்: மஹிந்திரா – ஹிந்துஜா குழும சைக்யூர் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

டிஜிட்டல் மாற்றம், ஆலோசனை மற்றும் வணிக மறுகட்டமைப்புச் சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டெக்மஹிந்திரா, உலக அளவில் தரமான மேம்பட்ட இணைய பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான இந்துஜா குழுமத்தின் சைக்யூர் எக்ஸ் உடன் உலகளாவிய உத்தி அடிப்படையிலான கூட்டு செயல்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
வெற்றிகரமான டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக இணைய பாதுகாப்பு தீர்வுகளை வழங்க இந்த கூட்டு செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஆலோசனை மற்றும் டிஜிட்டல் நடைமுறை நிபுணத்துவத்துடன் திகழும் டெக்மஹிந்திரா நிறுவனம் ஆலோசனை, திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு, ஏற்பாடு மற்றும் சேவைகளின் செயல்பாடு ஆகியவற்றை வழங்கும்.
டெக்மஹிந்திராவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.பி.குர்னானி, இந்துஜா குழுமத்தின் இணைத் தலைவர் ஜி.பி. இந்துஜா ஆகியோர் கூட்டு செயல்திட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
”டெக்மஹிந்திராவுடனான கூட்டு செயல்பாடு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்தியப் பிரதமரின் முன்னாள் உளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு
ஆலோசகரும் சைக்யூரி எக்ஸின் செயல் தலைவருமான எம்.கே.நாராயணன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...