Home தமிழ்நாடு ஆல்ஃபா லாவல் நிறுவனம் சார்பில் மறைமலைநகர், ஆவடியில் வாட்டர் ஏடிஎம் துவக்கம்

ஆல்ஃபா லாவல் நிறுவனம் சார்பில் மறைமலைநகர், ஆவடியில் வாட்டர் ஏடிஎம் துவக்கம்

வெப்பமாற்றுகை, பிரித்தல் மற்றும் திரவ கையாளல் ஆகியவற்றிற்கான தயாரிப்பு பொருட்கள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஆல்ஃபா லாவல், சென்னை அருகே மறைமலைநகர் மற்றும் ஆவடி நகராட்சிகளில் வாட்டர் ஏடிஎம்களை நிறுவி, செயல்பாட்டிற்கு அறிமுகம் செய்திருக்கிறது.
காட்டாங்குளத்தூர் வாட்டர் ஏடிஎம்&ஐ மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் வி.விஜயகுமாரி, நேரடியாக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். நகராட்சியின் பொறியியலாளர் மற்றும் இளநிலை பொறியியலாளர் செண்பகவல்லி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆணையர் விஜயலட்சுமி, ஆல்ஃபா லாவல் நிறுவியிருக்கும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு வசதிகள் குறித்தும் மற்றும் சமூகத்திற்கு இது வழங்கவிருக்கும் ஆதாயங்கள் குறித்தும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இந்த வாட்டர் ஏடிஎம், இப்பகுதிகளில் வசிக்கும் வசதி குறைவான, ஏழை எளிய, நடுத்தர மக்கள் 3 ஆயிரத்து-க்கும் அதிகமான குடும்பங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும்.
இதேபோல காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது நீர் சுத்திகரிப்பு ஆலையை ஆல்ஃபா லாவல் இந்தியாவின் மரைன் மற் றும் சர்வீஸ் துறையின் ராம்தாஸ் சலுன்கே ரிமோட் மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நீர் சுத்திகரிப்பு ஆலை கள், சூரியஒளி மின்சாரத்தின் மூலம் இயங்குகின்ற கிளவுட் மேலாண்மை யின் கீழான 10 சுத்திகரிப்பு நிலை கள் கொண்ட பணமில்லாமல் செயல் படுகின்ற வாட்டர் ஏடிஎம்களாகும்.
இந்த ஆலையானது, 10 நிலைகள் கொண்ட முழுமையான தானியக்க செயல்பாடுள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பாகும். இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 1000 லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இயங்கக்கூடியவையாகும். இது அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைவிடத்திலும் ஒரு நாளைக்கு 8000 லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கமுடியும். கோடை காலத்தில் குளிரூட்டப்பட்ட நீரை வழங்குவதற்கான வசதிகளும் இந்த வாட்டர் ஏடிஎம்களில் இருக்கின்றன.
இந்த ஏடிஎம்களில் தூய குடிநீரானது, 20 லிட்டர் கேன் ஒன்றுக்கு ரூ.7 என்ற கட்டுபடியா கக்கூடிய விலையில் வழங்கப்படுகிறது. பதிவு செய்முறையுடன் கூடிய ஒரு ப்ரீ-லோடட் (முன்பே பணம் செலுத்தியிருக்கும்) அட்டையை பயன்படுத்தி, நீரை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளுக்கு இரண்டு கேன்கள் வரை ஒவ்வொரு குடும்பமும் நீரை பெற்றுக்கொள்ளலாம். ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த குடிநீருக்காக வசூலிக்கப்படும் தொகையானது, இந்த ஏடிஎம்மின் பராமரிப்பு செலவிற்கும் மற்றும் ஆலையின் ஆபரேட்டர் ஊதியத்திற்கும் பயன்ப டுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் ராம்தாஸ் சலுன்கே, நிஷாந்த் ஸ்ரீவத்சவா ஆகியோர் பேசுகையில் “பாது காப்பான குடிநீருக்கான அணுகு வசதி ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்; கூடிய விரைவில் தமிழ்நாட்டில் பிற நகராட்சிகள் மற்றும் கிராமங்களில் இத்தகைய ஏடிஎம்களை இன்னும் அதிக அளவில் நாங்கள் நிறுவவிருக்கிறோம்” என்று கூறினார். திரு. நிஷாந்த் ஸ்ரீவத்சவா பேசுகையில், “மறைமலைநகர் மற்றும் ஆவடி போன்ற பகுதிகளில் நீரின் உப்புத்தன்மை அளவு மிகவும் அதிகமாகும். நிலத்தடி நீர் மட்டும் குறைந்துவருவது, நீரின் வேதிப்பொருட்களின் நுண்ணு யிர் மாசு இருக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. நீர் கிடைக்கும் நிலை மற்றும் அதை சேகரிப்பதற்கான கட்டுபடியாகும் அணுகுவசதி என்பதே தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் அணுகுவசதியை கட்டுப்படுத்துகின்ற இரு முக்கிய பிரச்சனைகள் என்று நாங்கள் கண்டறிந்தோம். வாட்டர் ஏடிஎம்களை நிறுவுவதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர;வு காணவும் மற்றும் வசதியற்றவர்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான குடிநீரை வழங்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம்இ” என்று குறிப்பிட்டார்.
இந்த நீர் சுத்திகரிப்பு ஆலைகள், மறைமலை நகரில், காட்டாங்குளத் தூரிலும் மற்றும் காந்தி பூங்கா அருகிலும் அமைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...