Home தமிழ்நாடு வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு மைதானத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஆவின் பாலகம்...

வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு மைதானத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஆவின் பாலகம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய அதி நவீன பாலகத்திற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், ஆவின் தலைவர் கே.பி.ராஜூ, பொது மேலாளர் ஆர்.ரவிக்குமார், பொது மேலாளர்(விற்பனை) சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:
‘ஆவின்எனும் வணிகப் பெயர் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்பட்டு வரும் பெயராக உள்ளது. இந்நிறுவனம் 4.5 லட்சம் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 25 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், தொடர்ந்து பால் வழங்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை ஆவின் நிறுவனம் தடையின்றி மேற்கொண்டது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி உரிய நேரத்தில் கிடைத்திட, பொதுமக்களுக்குத் தேவைப்படும், இடங்களில் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும், நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும், பால் விற்பனை ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக அதிகப்படியான எண்ணிக்கையில் சில்லறை விற்பனையாளர்கள் ஆவின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகமெங்கும் தினசரி ஆவின் பால் விற்பனை அளவு 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 346 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமி ருந்து 1,90,000 லிட்டரும், திருப்பூர் மாவட் டத்தில் 240 சங்கங்களிடமிருந்து 1,13,000 லிட்டரும் என மொத்தம் 3,00,000 லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்து பதப்படுத்தி வருகிறது. கோவை மாவட் டத்தில்; நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் விற் பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதோடில்லாமல் பால் உபபொருட் களான வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமணப்பால், தயிர், மோர் மற்றும் பாதாம்பவுடர் முதலியவையாக உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிவருகிறது. மேலும் நுகர்வோர்களின் தேவையை கருத்திற்கொண்டு சென்னையில் உள்ள பால்உபபொருட்கள் பண்ணையிலிருந்து ஐஸ் க்ரீம், பன்னீர், சீஸ், சாக்லெட் முதலியவை பெறப்பட்டு கோவை மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 1,24,000 லிட்டராக இருந்த பால் உற்பத்தி அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 1,90,000 லிட்டராக அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,42,000 லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையானது அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 1,60,000 லிட்டராக அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஆவின் பால் உபபொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு ரூ.1கோடியாக இருந்தது. தற்போது ரூ.1.60 கோடியாக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கால்நடை கலப்பு தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.6 வீதம் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இலவசமாக கால்நடை மருத்துவ சேவைகள் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கு நடப்பாண்டில் ரூ.72 லட்சம் மதிப்பிலான 51 தானியங்கி பால்கொள்முதல் சாதனங்கள்; இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடி மதிப்பில் மானியத்துடன் தீவன வங்கித் திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு 1000 ஏக்கரில் தீவன உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் 200 சில்லரை பால் விற்பனை முகவர்கள் மற்றும் 20 மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளான சுந்தராபுரம், போத்தனூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நுகர்வோர் மற்றும் பால்முகவர்கள் பயன்படும் வகையில் புதியதாக மண்டல அலுவலகம் சுந்தராபுரம் பகுதியில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில்கியோஸ்க்டைப்` ஆவின் பாலகம், ஒன்றுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் மொத்தம் 27 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆவின் சாதனைத் திட்டங்களின் தொடர்ச்சியாக, ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் 3,306 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ள அதிநவீன பாலகத்திற்கு (ஆவின் ஹை டெக் பார்லர்) இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆவின் பாலகத்தில், நுகர்வோர்களின் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம், குழந்தைகள் விளையாடுவதற்கென தனியாக விளையாட்டு மைதானம், சிறிய அளவில் நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்படவுள்ளது. 24 மணிநேரமும் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் கிடைக்கும் வகையில் இப்பா லகம் அமைக்கப்படவுள்ளது இதன்மூலம் கோவை மாவட்ட மக்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...