Home தமிழ்நாடு ரத்தம் சொட்டச்சொட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த வாலிபர்

ரத்தம் சொட்டச்சொட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த வாலிபர்

கோவையில் சிலர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி வாலிபர் ஒருவர் ரத்தம் சொட்டச்சொட்ட கமிஷ னர் அலுவலகம் வந்து புகார் அளித்ததால் பரப ரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ராஜரத்தினம். இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பல னின்றி அவரது மனைவி உயிரிழந்துவிடவே மனமு டைந்த ராஜரத்தினம் கோவையிலேயே சாலையில் தங்கி வந்துள்ளார்.
இந்த சூழலில், கோவை வாலாங்குளம் பகுதிக்கு சென்று மீன் பிடித்து விற் பனை செய்யலாம் என்று முடிவு செய்த அவர், இன்று காலை அங்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருந்தவர்களுக்கும் ராஜ ரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜனத்தினம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து முகம் மற் றும் கை, கால்களில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ராஜரத்தினம் அங்கு தனக்கு நீதிவேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மருத்துவ மனைக்கு அழைத்து சென் றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜரத்தினத்திடம் தெரி வித்தனர்.
இந்த சம்பவத்தால் காவல் ஆணையர் அலுவல கம் முன் பரபரப்பு ஏற்பட் டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...