Home தமிழ்நாடு அசாம் மாநில அரசுடன் மூங்கில்களால் ஊதுபத்தி தயாரிக்க சைக்கிள் பிராண்ட் ஒப்பந்தம்

அசாம் மாநில அரசுடன் மூங்கில்களால் ஊதுபத்தி தயாரிக்க சைக்கிள் பிராண்ட் ஒப்பந்தம்

சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி தயாரிப்பாளரான என். ரங்கா ராவ் அன்ட் சன்ஸ் நிறுவனம் உலக அளவில் ஊதுபத்தி தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் மூங்கில்களை கொண்டு ஊதுபத்தி தயாரிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை அசாம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது குறித்து அசாம் மாநில தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் சந்திரமோகன் பட்டோரி கூறுகையில், அசாம் ஊதுபத்தி திட்டமானது, மூங்கில் சார்ந்த பொருளாதார திட்டத்தின் முதல் படியாகும். சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனத்துடனான உறவு என்பது, உறுதியான சந்தை மற்றும் தரமான உற்பத்தி வளர்ச்சிக்கு உறுதி அளிப்பதோடு கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இந்த திட்டமானது மூங்கில விவசாயிகளையும் தொழில்முனை வோர்களையும் ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் வரிசையில் பெரிய ஊதுபத்தி தயாரிக்கும் பிராண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவித்தார். இது குறித்து சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தியின் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா கூறுகையில், அரசின்ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் தொலை நோக்கு திட்டத்தை நாங்கள் உறுதிபட நம்புகிறோம். நமது நாட்டில் மூங்கில் வளம் ஏராளமாக இருப்பதால், அரசாங் கத்தின் ஆதரவோடு நாங்கள் மூங்கில் கொள்முதலை விரைவில் உள்ளூர் மய மாக்குவோம் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் முதித் மார்க்கெட்டிங் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...