Home பிற செய்திகள் செம்மொழி அரிமா சங்க பதவியேற்பு விழா

செம்மொழி அரிமா சங்க பதவியேற்பு விழா

கோவை பன்னாட்டு அரிமா சங்கங்கள்,கோவை செம்மொழி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுனர் அரிமா தரம்ராஜ் (எம்ஜேஎப்) பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை பட்டைய தலைவர் அரிமா லட்சுமி ராஜா ஒருங்கிணைத்து நடத்தினார்.
செம்மொழி அரிமா சங்கத் தலைவராக விக்னேஷ் குமார், செயலாளராக அசோக், பொருளாளராக தனபால் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் ஆளுனர்கள் ஆறுமுகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். அதன் புதிய செயல் திட்டங்களை முதல் துணை ஆளுனர் குப்புசாமி, இரண்டாம் துணை ஆளுனர் ஜான் பீட்டர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விழாவின் டாக்டர் ராஜா செல்வகுமார் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பார்வதி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு காணொலி மூலம் சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் அரசு உத்தரவு படி சமூக இடைவெளி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த பின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...