Home தமிழ்நாடு பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியாவின் பாதுகாப்பான நடைமுறை: வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்

பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியாவின் பாதுகாப்பான நடைமுறை: வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்

மலேசியன் பனை எண்ணெய் கவுன்சில் (MPOC) வாடிக்கையாளர்களுக்கு நடத்திய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் மருத்துவ, ஊட்டச் சத்துத் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பேசினர்.

இந்த நிகழ்ச்சிகள் கடந்த16-ம் தேதி விசாகப்பட்டினம், 17-ம் தேதி, விஜய வாடா 18-ல் பெங்களூரு ஆகிய இடங் களில் நடைபெற்றன.

இந்த வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின் மையக்கரு, ‘பனை எண்ணெயின் மருத்துவ, ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் பனை எண்ணெய் உற்பத்திக்கு மலேசியா முன்னெடுத்து வரும் இணக்கமான, பாதுகாப்பான நடைமுறைகள்’.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் இல்லத்தரசிகள், செஃப், தொழில்முனை வோர், ஃபிட்னெஸ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பனை எண்ணெய், அதன் நன்மைகள், உணவு உள்பட அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறித்துத் தங்களுடைய அறிவை நிபுணர்களும் வல்லுநர்களும் பகிர்ந்து கொண்டனர்.

நம்முடைய டயட்டில் ஏற்படுத்தும் சிறிய மாறுதல்கள் எப்படிப் பெரிய மாற் றங்களை ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்த டாக்டரும் பேராசிரியருமான கேத்தன் மேத்தா தெரிவித்தார்.

மும்பையின் நம்பகமான மருத்துவமனைகளில் இதயவியல் – சுவாச நிபுணர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணராகக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் பேசினார்.

“உணவு குறித்த நமது தேர்வுகள் முக்கியமானவை. அதன் மூலம் நம்முடைய இதய நலனை பெருமளவு மேம்படுத்த முடியும்” என்றார்.

மலேசிய பனை எண்ணெய் தொழிலும், MPOC-யும் முன்னெடுத்துள்ள வேலைகளைப் பற்றி இந்தியா, வங்கதேசம், நேபாளம், இலங்கை நாடுகளுக்கான MPOC தலைவர் பாவ்னாஷா விளக்கினார்.

மலேசிய பனை எண்ணெய், அதன் மற்ற தயாரிப்புகள் குறித்து வாடிக் கையாளர்களுக்கு பாவ்னா விளக்கினார். மலேசிய நாடும் MPOC-யும் பனை எண் ணெய் உற்பத்திக்குக் கடைபிடிக்கும் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பான நடை முறைகள், பொருளாதார – தொழில் நுட்ப சாதகங்கள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு,...

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசு...

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட, வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி...

கி.வீரமணி 89-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள்...

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் கொரோனா இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கிற்கான தேவையே இருக்காது என்றும் தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை என்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர்...