Home பிற செய்திகள் முதலமைச்சர் வருகை : கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

முதலமைச்சர் வருகை : கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் வருகையையொட்டி நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை காலை 6:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை. அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம், வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்துவரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவஇந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லவேண்டும்.

திருச்சி சாலையில் இருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசுமருத்துவமனை, லங்காகார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கம் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில்நிலையம் வழியாக திருச்சி சாலைக்கு செல்லவேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக செல்ல அனுமதியில்லை.

மாற்று வழியாக அவினாசி சாலைக்கு செல்ல டிஐஜிஅலுவலகம் வந்து ரெட்பீல்ட் வழியாக புலியகுளம் சென்று இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி சாலையை அடையலாம். எல்.ஐ.சி சாலையில் வாகனங்கள் செல்லகூடாது.

மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக்கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு. ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமிமில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகருக்கு செல்லவேண்டும்.

அவனாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல். ஐ. சி வழியாக வராமல் லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு,...

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசு...

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட, வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி...

கி.வீரமணி 89-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள்...

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் கொரோனா இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கிற்கான தேவையே இருக்காது என்றும் தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை என்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர்...