Home பிற செய்திகள் 41வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையை நேரில் ஆய்வு செய்தார், அமைச்சர் துரைமுருகன்

41வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையை நேரில் ஆய்வு செய்தார், அமைச்சர் துரைமுருகன்

41வது முறையாக நிரம்பியுள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், காவிரி டெல்டா பகுதியின் ஜீவ நாடியாகவும் விளங்கக்கூடிய மேட்டூர் அணையானது வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 13ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் அணைக்கு வரும் 40,000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.

அமைச்சருடன் நீர்வளத்துறை தலைமை செயலாளர், அதிகாரிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நீர் ஏற்று நிலையம் மற்றும் உபரி நீர் திட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறக்கூடிய உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்பும் பணியானது கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதால் நீரேற்று நிலையம் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலைய பகுதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்ய இருக்கிறார். இதனை தொடர்ந்து ஒகேனக்கல் செல்லும் அமைச்சர், அங்கும் ஆய்வு நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு,...

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசு...

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட, வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி...

கி.வீரமணி 89-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள்...

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் கொரோனா இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கிற்கான தேவையே இருக்காது என்றும் தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை என்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர்...