இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறு வனமான பயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி கல்வி நிறுவனம், கோவை, செட்டிபாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு, “பிஜ்- பிளேர் 2021” என்ற, வணிக கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கின் நோக்கம், இளம் தொழில் முனைவோரையும் இளைஞர்களையும் தொழிலில் ஊக்கப்படுத்தி அவர்களது திறனையும், அறிவையும் மேம்படுத்துவ தாகும்.
இந்த தலைப்புகளுக்கு ஏற்ற வகையில், “இளம் மற்றும் தீப்பொறி தரும் வணிக தலைவர்களுக்கான வணிக கருத்தரங்கு” என்ற கருத்தில் விவாத நிகழ்வுகள் நடந் தன.
தென்னிந்திய அளவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பயர்பேர்ட் நிறுவனம், 2,50,000 ரூபாயை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. முதலிட வெற்றியாளர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதமும், இரண்டாம் இடம் பெற்ற வெற்றி யாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும் பரி சாக வழங்கப்பட்டன.
கருத்தரங்கு துவக்க விழாவுக்கு கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.வி ரமேஷ்பாபு தலைமை விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “இளம் தலைமுறையினரின் வணிக திறனை கண்டறிந்து, அவர்களது யோசனையை இந்தியாவின் ஸ்டார்ட் அப் இலக்கிற்கு பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
கௌரவ விருந்தினராக நடன கலைஞ ரும் நடிகையுமான காயத்ரி கிருஷ்ணா பங்கேற்றார். பயர்பேர்ட் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பி.ஸ்ரீனிவாச ராவ் வரவேற்றார். உதவி இயக்குனர் பேராசி ரியர் எஸ். ஜோதிர்லிங்கம் கருத்தரங்கின் நோக்கம் பற்றி விளக்கினார்.
மாணவர்களின் திறன்மேம்பாட்டு பிரிவு டீன் பேராசிரியர் சேட்டன் பஜன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் எக்கி ஹோமா பம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
பயர்பேர்ட் ஆராய்ச்சி மற்றும் மேலாண் மை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.கே சுந்தர்ரா மன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் ஹரி கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்