Home தமிழ்நாடு சேலம் மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் கொரோனா நிவாரண உதவிக்கு நன்றி

சேலம் மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் கொரோனா நிவாரண உதவிக்கு நன்றி

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால், திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், திருக்கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர்.

இதனை பரிசீலித்து, திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளில் கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

முதல்வர் உத்தரவுப்படி, சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கொரோனா நோய் பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலையான மாதச் சம்பளம் இல்லாமல் பணியாற்றும் 363 அர்ச்சகர்கள்,
பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.14,52,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகை வழங்கினார்.


சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், கத்தேரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூசாரி டி.மோகன் கூறியதாவது:

நான் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அவ்வப்போது சமையல் பணியும் செய்து வருகிறேன். எங்களுக்கு இரண்டு மகன்கள்.

முதல் மகன் மோ.பிரகதீஸ்வரன் பேஷன் டெக்னாலஜி படித்து உள்ளார். இரண்டாவது மகன் 2-ம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.

கடந்த ஓர் ஆண்டாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மற்ற வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையில், வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டோம்.

உறவினர்களுக்கும் இதே நிலைமை தான். ஆகையால் நான் யாரிடமும் உதவி கேட்பதில்லை. இந்நிலையில், ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்த முதல்வர், கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கி உள்ளார்.

இத்தொகையினை எங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் மற்றும் வீட்டு வாடகை செலுத்துவதற்கும் பேரூதவியாக இருந்தது.

கொரோனா காலத்தில் என்னைப் போன்ற வயதான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து சிரமங்களை போக்கும் வகையில் அளித்த இந்த உதவிக்கு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள அருள்மிகு பூத்தாலேஸ்வரர் திருக்கோயில் பூசாரி வெங்கட பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

பூசாரியாக பணியாற்றுகிறேன். இத்துடன் கேபிள் டிவி தொழில்நுட்ப பணியாளராகவும் பணியாற்றி வருகிறேன்.

பி.காம் படித்துள்ளேன். எங்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். மகள் இளங்கலை 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மகன் பிளஸ் 1 படித்து வருகிறார்.

அருள்மிகு பூத்தாலேஸ்வர் திருக்கோவில் ஒரு கால பூஜை திட்டத்தில் இருப்பதால் ரூ.890 மாதச் சம்பளமாக கிடைக்கும். கேபிள் டிவி தொழில்நுட்ப பணி மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் வருவாயும் இல்லாமல் இருந்தது. மகள், மகனை படிக்க வைக்க மிகவும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில், முதல்வர் கொரோனா கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கி உள்ளார். இது எனக்கும் பேரூதவியாக இருந்தது.

இதற்காக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வேம்புடிதாளத்தில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் அர்ச்சகர் எஸ்.சின்னுசாமி கூறியதாவது:

நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு பத்து வயதில் மகன் உள்ளார்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் எங்கள் குடும்பத்தினர் பரம்பரையாக அர்ச்சகர் பணி மேற்கொண்டு வருகிறோம்.

எனக்கு இதைத் தவிர வேறெந்த தொழிலும் கிடையாது. எனது வருமானத்தைக் கொண்டே என் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இச்சூழலில் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்களை முதல்வர் வழங்கி உள்ளார்.

இது மிகுந்த உதவியாக இருந்தது. இதற்கு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சேலம் மாவட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.14,52,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கியதற்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் கொரோனா நிவாரண உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...