Home பிற செய்திகள் ஊட்டி மார்க்கெட்டில் தீ & ரூ.2 கோடி சேதம்: அதிமுக சார்பில் 81 கடைகளுக்கு ...

ஊட்டி மார்க்கெட்டில் தீ & ரூ.2 கோடி சேதம்: அதிமுக சார்பில் 81 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து போன 81 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் நிதியுதவி அதிமுக சார்பில் வழங்கப்படுகிறது.
ஊட்டி நகராட்சிக்கு சொந்த மான மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது, 81 கடைகள் தீக்கிரையாயின. தக வல் அறிந்து அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் விரைந்து சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட் டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நீலகிரி மாவட்ட அதிமுக சார்பாக தலா 5ஆயிரம் வீதம் 81 குடும்பங்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்று புத்தி சத்திரன் அறிவித்தார். அவருடன் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சிவினோத், ஊட்டி நகர செயலாளர் க சண் முகம், முன்னாள் நகர செயலாளர் ராஜாமுகமது, சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர், நகராட்சி ஆணையாளர், நகர பாசறை செயலாளர் அக்கீம்பாபு, ஓ.சி.எஸ் தலைவர்ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
அப்போது பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன். தீ விபத்து குறித்து அறிந்ததும் உள்ளாட்சி துறை அமைச்சர் பாதிக் கபட்ட வணிக மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையானவற்றை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். பாதிப்பு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தீயினால் சேதமடைந்த நகராட்சி சந்தையை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி கி.ராமு மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், முன்னாள் அதிமுக நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்பு நகராட்சி ஆணையாளரிடம் இச்சம்பவம் குறித்து கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில்இரவு நேரம் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இது பற்றிக் கூறி கடையை இழந்த வியாபாரிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்`என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை

கோவையில் நாளை அரசு சார்பில் நடைபெற உள்ளது சுதந்திர தினத்தையொட்டி, இன்று போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி

சுதந்திர தினத்தையொட்டி பேட்டரி செல்லில் மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட 13 இந்திய தேசத் தலைவர்கள் ஓவியத்தை எனாமல் பெயின்டில் ஓவியமாக வரைந்து கோவையைச் சேர்ந்த...

மானியத்துடன் இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட...

பேமிலி டி.வி- குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சேனல் பால்தினகரன் தொடங்கி வைத்தார்

குடும்ப நல்வாழ்விற்கு வழிகாட்டும் பல சுவாரஸ்யமான நிகழச்சிகளுடன் பேமிலி டி.வி என்ற குடும்ப நல்வாழ்வு தொலைக்காட்சி சானலை இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ராசாமணி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அலுவலகப்பணிக்கு திரும்பியதையொட்டி மலர் கொத்து வழங்கி...