Home தமிழ்நாடு தமிழ்நாடு சுகாதார துறை உத்தரவு: ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்

தமிழ்நாடு சுகாதார துறை உத்தரவு: ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் பட்ட 1,212 செவிலி யர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளையுடன் ஒப்பந்தம் முடியவிருந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 2015-2016-ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பணியில் இவர்கள் அனைரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நிரந்தரப் பணியாளர் களாக மாற்றப்பட்டுள்ள செவிலி யர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...