Home தலையங்கம் முத்தான வெற்றிக்கு முழு காரணமான ஸ்டாலின்

முத்தான வெற்றிக்கு முழு காரணமான ஸ்டாலின்

திமுக வெற்றிக்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான். அவர் மட்டும் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

கடந்த சில மாதங்களாக மு.க.ஸ்டாலினின் இடையறாத சுற்றுப்பயணம், மெய்வருத்தம் பாராத உழைப்பு, தளர்ச்சி இல்லாத முயற்சி, மக்களை சந்தித்த அணுகுமுறை, திட்டமிட்ட மேலாண்மை, மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும் வாக்குறுதிகள் எல்லாம் சேர்ந்து தான் இந்த முத்திரை பதிக்கும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது.

கொரோனாவின் உச்சத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் திமுக நிர்வாகிகள் தொண்டர்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவிகள் வழங்க செய்தார்.

நம் துன்பத்தில் தேடி வருகிறார்களே என்று மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு இந்த உதவிகள் முழு நம்பிக்கையை கொடுத்தன.

தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் “எல்லோரும் நம்முடன்” நவம்பர் மாதத்தில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” டிசம்பர் மாதத்தில் “ ஏன் அதிமுகவை நிராகரிக்கிறோம்“ இந்த ஆண்டு ஜனவரியில் “ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” ஆகிய பெயர்களில் மு.க.ஸ்டாலின் நடத்திய பிரச்சாரங்கள் மக்கள் மனதில் ஆதரவை விதைத்தன.

ஆனால் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனேயே அவருக்கு பெரும் பொறுப்பு காத்து நிற்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அவருக்கு இது தான் பெரிய சவாலாக இருக்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் மிகப்பெரிய பணிகள் அவருக்காக காத்திருக்கிறது. தமிழக அரசின் நிதி நிலையும் அடுத்த பெரும் சவாலாக இருக்கும்.

அவர் கடந்த ஏப்ரல் 3ம் தேதி நிருபர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், நீங்கள் முதலமைச்சர் ஆனால் கையெழுத்திடப்போகும் முதல் ஆணை எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின்போது நான் வாங்கியுள்ள மனுக்களுக்கு முதல் 100 நாட்களில் தீர்வு காண்பதற்கான ஒரு செயலாக்கத்துறையை அமைப்பது முதல் கையெழுத்தாகவும், முதல் அரசாணையாகவும் இருக்கும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்த சில முத்தான திட்டங்களுக்கு குறிப்பாக குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி, கொரோனா கால நிதியுதவியாக ரூ.4000 வழங்குவது போன்றவையாகவும் இருக்கும் என்று கூறியதெல்லாம் அவர் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் நிறைவேறி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

மொத்தத்தில் திமுக பெற்ற வெற்றி என்பது ‘ஸ்டாலின் தான் வராரு! விடியல் தர போறாரு!’ அது தான், அது தான், மக்களுடைய முடிவு என்பது கூட.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...