Home தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் - பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் – பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?

வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்ப ற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன? என்ற விவரம் வருமாறு:
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற் பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும்.
தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியுடன் மே ஜைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

முதல் கட்ட நடவடிக்கையாக, 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
காலை 8.30 மணிக்கு, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில்,

வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்தி லும் 14 மேஜைகள் போடப்பட்டு, அதில் தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கும்.
14 மேஜைகளில், ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என, ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல், சரியாக இருக்கிறதா என்பது முக வர்கள் முன்னிலையில் ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதி செய்யப்படும்.
தொகுதி, வாக்குச் சாவடி, வார்டு வாரியாக பதிவான வாக்குகள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் எண்ணப்படும்.

வாக்குப்பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும் , எண்ணிக்கை தினத்தன்று எண்ணப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருக் கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

குறைந்தபட்சமாக 15 சுற்றுகளும் அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரையும் நடைபெற வாய்ப்புகள் உண்டு.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், முடிவுகள் வெளியிடும் முன்பாக, அரசியல் கட்சி முகவர்களின் கையொப்பம் பெறப்படும்.

ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலுள்ள அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக பதி வேற்றம் செய்யப்படும்.

பிற்பகலுக்குள்ளாக முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார்?, வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?, என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

அந்த சான்றிதழை வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...